கேரள சுற்றுலாத்துறையின் ‘லென்ஸ்கேப் கேரளா’ புகைப்படக் கண்காட்சி சென்னையில் தொடக்கம் முன்னணி பயண மற்றும் ஊடக புகைப்படக் கலைஞர்கள் 10 பேரின் 100 சிறந்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன
Chennai / March 4, 2026
சென்னை, 4 மார்ச் 2026: கேரள சுற்றுலாத்துறையின் அகில இந்திய புகைப்படக் கண்காட்சி ‘லென்ஸ்கேப் கேரளா’ இன்று சென்னையிலுள்ள லலித் கலா அகாடமியில் தொடங்கியது. God’s Own Country என்று அழைக்கப்படும் கேரளாவின் இயற்கை அழகு, கலாசாரம் மற்றும் ஆண்டு முழுவதும் செல்லத்தக்க இடமாக உள்ள வாழ்க்கை அனுபவங்களை 100 தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிரேம்களில் வெளிப்படுத்தியது.
மலையாள நடிகை திருமதி சீமா, மற்றும் எழுத்தாளரும், விமர்சகரும், Better Photography-இன் முன்னாள் ஆசிரியருமான திரு. சதானந்த மேனன் ஆகியோர், இந்தியாவின் 10 முன்னணி பயண மற்றும் ஊடக புகைப்படக் கலைஞர்கள் வழங்கிய கண்கவர் புகைப்படங்களின் அற்புதத் தொகுப்பை வெளிப்படுத்தும் இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்தனர்.
இந்த கண்காட்சி மார்ச் 7 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும். இந்தக் காட்சியகம் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞர்களுக்கான புகைப்படக் கலை பற்றிய ஒரு மாஸ்டர்கிளாஸ் மார்ச் 5 அன்று 2 மணி முதல் மாலை 5 மணி வரை அகாடமியில் நடைபெறும்.
புகழ்பெற்ற கலை விமர்சகர் உமா நாயர் அவர்களால் தொகுக்கப்பட்டதும், விருது பெற்ற வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு புகைப்படக் கலைஞர் பாலன் மாதவன் இயக்கியதுமான ‘லென்ஸ்கேப் கேரளா’, நாட்டிலேயே முதல் முயற்சியாகும். லென்ஸ்கேப் கேரளாவின் பங்கேற்ற புகைப்படக் கலைஞர்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பல்வேறு கருப்பொருள்களில் கவனம் செலுத்தினர்.
சென்னையில் நடைபெற்றும் நிகழ்ச்சியின் தொடக்கத்தை முன்னிட்டு வெளியிட்ட தனது செய்தியில், கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் திரு பி. ஏ. முகமது ரியாஸ் அவர்கள், அனைத்து காலங்களிலும் பயணிக்க ஏற்ற இடமாக கேரளம் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் ஆழ்ந்த அனுபவங்களை வெளிப்படுத்தும் ஒரு படைப்பாற்றல் மிக்க முயற்சியாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
“கேரள மக்கள் வளமான மற்றும் நீடித்த கலாசாரத் தொடர்பைக் கொண்ட இந்த மாநகரம் இந்தப் பயணக் கண்காட்சி வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அமைச்சர் கூறினார்.
“ஆறுகள், காயல்கள் மற்றும் மலைவாசஸ்தலங்களால் சூழப்பட்ட கடலோர மாநிலத்தின் வரலாற்றுப் புகழ் மிக்க அழகைத் தவிர, இந்தக் கண்காட்சி கேரளாவின் கட்டிடக்கலை அதிசயங்கள், கலாசார வெளிப்பாடுகள் மற்றும் உண்மையான கேரளக் கதையை வடிவமைத்த மக்களின் ஒற்றுமை மற்றும் இணக்கத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வழிகாட்டியாக செயல்படுகிறது,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
லென்ஸ்கேப் கேரளா, ஆர்வத்தைத் தூண்டும், பாராட்டை ஆழப்படுத்தும், மற்றும் நீடித்த மதிப்புணர்வை வளர்க்கும் வகையில் கேரளாவின் பல பரிமாணங்களை முன்வைக்கிறது.
கண்காட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் புகைப்படக் கலைஞர்கள்: எச். சதீஷ், கவுண்டேயா சின்ஹா, ஷிவாங் மேத்தா, சைபல் தாஸ், உமேஷ் கோக்ணா, சௌரப் சட்டர்ஜி, நடாஷா கர்தார் ஹேம்ரஜாணி, ஐஸ்வர்யா ஸ்ரீதர், அமித் பாஸ்ரிச்சா, மனோஜ் அரோரா.
உமா நாயரின் கூற்றுப்படி, “இந்தக் கண்காட்சி கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எளிதாக இணைக்கும் ஒரு காட்சிப் பதிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது”.
“காட்சியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உற்சாகமும் உயிர்ப்பும் நிறைந்த தனிப்பட்ட துணிப்படங்களை கருத்தில் கொண்டால், இந்த நிகழ்ச்சி ஒரு சிறப்பான படைப்பாற்றல் முனைப்பாக திகழ்கிறது,” என்று பாலன் மாதவன் தெரிவித்தார்.
பங்கேற்ற புகைப்படக் கலைஞர்கள் கடந்த டிசம்பரில் ஐந்து நாட்கள் கேரளாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் பயணம் செய்து இயற்கை, விலங்கியல், பாரம்பரியம், கிராமிய மற்றும் கடலோர வாழ்க்கை, கட்டிடக்கலை, திருவிழாக்கள் மற்றும் ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களை பதிவு செய்தனர்.
புதுதில்லியில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இதுவரை வடோதரா, அகமதாபாத், மும்பை, புனே மற்றும் பெங்களூரு நகரங்களில் சுற்றுப்பயணம் செய்தது. சென்னையில் பார்வையாளர்களை கவர்ந்திழுத்த பிறகு, இந்தக் கண்காட்சி ஹைதராபாத் (மார்ச் 12–14), சூரத் (19–21) மற்றும் இறுதியாக கொல்கத்தா (மார்ச் 27–29)
நகரங்களுக்கு நகர்கிறது.
Ends