இந்திய சர்வதேச கடல் உணவுவர்த்தக கண்காட்சி 2023ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெறுகிறது

இந்திய சர்வதேச கடல் உணவுவர்த்தக கண்காட்சி 2023ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெறுகிறது
Chennai / August 12, 2022

சென்னை, ஆகஸ் 12: கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுஆணையமானது (MPEDA) இந்திய கடல்உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இணைத்து இந்திய சர்வதேச கடல் உணவு வர்த்தககண்காட்சி (IISS) நடத்த இருக்கிறது. இது 23வது பதிவாகும் இந்த கண்காட்சி அடுத்த ஆண்டு 2023 பிப்ரவரி மாதம் 15 முதல் 17 வரை கொல்கத்தாவில் நடத்தவிருப்பதால், கடல் உணவுத்துறையில்  இந்தியாவின் மகத்தான முன்னேற்றங்கள் அனைத்தும் அம்சங்களை காட்சிப்படுத்தப்படும்.

 

திரு கே. என். ராகவன் IAS, தலைவர், MPEDA மற்றும் திரு ஜெகதீஸ் ஃபோபன்டி தலைவர் SEAI ஆகிய இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த சந்திப்பில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இப்பதிப்பை கொல்கத்தாவில் பிஸ்வா மேளா பிரங்கனில் நடக்கும் என்றார். இந்திய ஏற்றுமதியாளர்க்கும் கடல் பொருட்களில் இறக்குமதியாளர்க்குளும் இடையிலான தொடர்புக்கு சிறந்த தளமாக இருக்கும் என்று கூறினர்.

 

உற்பத்தியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் தாங்கள் தயாரிப்புகளை காட்சிபடுத்துவதற்கு ஒரு அரிய வாய்ப்பு ஆகும். உற்பத்தியாளர்களின் செயலாக்க இயந்திரங்கள், பேக்கேஜிங் அமைப்புகள், செயலாக்க மூலப்பொருட்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் குளிர்சாதன தொடர் சங்கில் அமைப்புக்கள் தாங்கள் வணிப ஒப்பந்தங்கள் பெறுவதற்கும் இது ஒரு சிறந்த தளமாக அமையும். கூடுதலாக தளவாடங்கள் மற்றும் சான்றளிப்பு, சோதனை பிரிவுகள் போன்ற சேவை வழங்குநர்களுக்கு ஒரு தளம் கிடைக்கும் என்றர்.

 

புதியவழிகளை ஆராய்வதற்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உலக சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கும் இந்த நிகழ்வு ஒரு பெரிய வாய்ப்பை வழக்கும். முதன்மை உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து போன்றவை கடல்உணவுப் பொருட்களின் முழுமதிப்புச் சங்கிலி நிலைத்தன்மை ஆகும். இந்த நிலை நாட்டின் அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்துவது மற்றொரு நோக்கமாகும். ஏற்றுமதி பொருட்களின் செயலாக்கம், கண்டுபிடிப்பு மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் புதியநுட்பத்தை இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

 

திரு ஜெகதீஷ் ஃபோபாண்டி, தலைவர் SEAI அவர்கள்  IISS கடல் உணவு வர்த்தக கண்காட்சி உலக அளவில் ஒரு பெரிய கண்காட்சியாக உருவெடுத்துள்ளது என்றர். இந்த கண்காட்சியின் கடல் உணவு பதப்படுத்தும் துறையில் பின்பற்றப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நிலையானந டைமுறைகளை முன்னிலைப்படுத்தும். மீன்பிடி மற்றும் விவசாயத்துறையின் ஒத்துழைப்போடு இந்திய கடல்உணவுச் செயலிகள் நிலையான இணைப்பில் பெரிய இடத்தை பிடித்துள்ளன. மதிப்புக்கூட்டலுக்கான அதன் தொழில்நுட்ப காப்புப் பிரதியை செயலாக்க துறை எப்போதும் மேம்படுத்த விரும்புகிறது என்றர்.

 

இந்த நிகழ்ச்சி 350 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் சுமார் 7000 சதுர மீட்டர் அமைக்கப்படும். தானியங்கு, IT தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டலுக்கான ஆற்றல் திறனுள்ள அமைப்புகள் பங்கு பெறும். கடல் உணவை ஏற்றுமதி செய்வதற்கு, உத்வேகத்தை அளிக்கும் நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கப்படும். அதில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் தொழில்நுட்ப அமர்வு இருக்கும்.

கடல் உணவு பதப்படுத்துபவர்கள், வாங்குவோர், பங்குதாரர்கள், கப்பலில் உள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற தொடர்புடைய துறைகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் அடங்குவர்

கடல்  உணவு  பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகிய துறையில் பரஸ்பர உறவில் கவனம் செலுத்தும் நாடுகளில் இருந்து வாங்குவோர் பிரதிநிதிகள் குழுகளை ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டாக்டர் திரு கார்த்திகேயன், இயக்குனர், திரு பிரதீப் செயலாளர் MPEDA ஆகியோர் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உடன் இருந்தனர் 

2021-22 ஆம் ஆண்டில் 7.76 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 13,69,264 டன் கடல் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.  மதிப்பின் அடிப்படையில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக ஏற்றுமதி பதிவு செய்துள்ளது. அதே சமயம் இறால் உற்பத்தி ஒரு மில்லியன் மெட்ரிக் டன்னைத் தாண்டியது. மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்புக்குத் தீர்வுகாணும் பல்முனை உத்தி மூலம் அடுத்த ஐந்து  ஆண்டுகளில் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதியை எட்ட வாய்ப்புள்ளது.

நிலையான மீன்பிடிப்பு முறைகள் மதிப்பு கூட்டல் மற்றும் பல்வகைப்படுத்தலின் மூலம் அதிகரித்த மீன்வளர்ப்பு உற்பத்தி ஆகியவற்றின் மூலம் ஏற்றுமதி லட்சியத்தை அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IISS 2023 நிகழ்ச்சியில் பங்கேற்க www.indianseafoodexpo.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம், இது ஸ்டால்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆன்லைனில் பதிவு செய்வதற்காக இப்போது திறக்கப்பட்டுள்ளது.

விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, கொச்சியின் பனம்பில்லி நகரில் உள்ள MPEDA யின் சந்தை மேம்பாட்டுப் பிரிவை +914842321722 என்ற தொலைபேசி எண்ணில்அல்லது iiss@mpeda.gov.in, pub@mpeda.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

Photo Gallery