கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) மதிப்பூட்டப்பட்ட கடல் உணவு குறித்த தேசிய திறன் மேம்பாடு ஒலிம்பியாட்டில் போட்டியிட தயாராக இருக்கும் நான்கு திறன்மிக்க நிபுணர்கள்
சென்னையில் ஜூலை 1 அன்று நடக்கவிருக்கும் 'சீஃபுட் எக்ஸ்போ பாரத்’ ஒலிம்பியாட்டின் இறுதிப் போட்டிகள்
Trivandrum / June 30, 2025
சென்னை, ஜூன் 30: கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதையும், மதிப்பூட்டப்பட்ட திறன்களை மேம்படுத்துவதையும், திறமையான தொழில்முறை வல்லுனர்களின் குழுக்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட MPEDA இன் (கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின்) அடித்தள முன்முயற்சியான தேசிய திறன் மேம்பாடு ஒலிம்பியாட்டின் இறுதிப் போட்டியில், கடல் உணவு பதப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற நான்கு வல்லுநர்கள் நாளை போட்டியிடவுள்ளார்கள்.
சென்னை நகரத்தில் இன்று இங்கு நடைபெறும் சீஃபுட் எக்ஸ்போ பாரத் 2025 க்கு முன்னதாக நடைபெற்ற ஒலிம்பியாட்டின் அரையிறுதி சுற்றில் பத்து போட்டியாளர்களில் இருந்து இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடல் தயாரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் (MPEDA,… (பெயர்களை சேர்க்கவும்) ஏற்பாடு செய்யப்பட்ட முதல் நிகழ்வின் நான்கு இறுதிப் போட்டியாளர்கள் (பெயர்களைச் சேர்க்கவும்)
நான்கு பெண்கள் உட்பட பத்து அரையிறுதிப் போட்டியாளர்கள், நோபாஷி இறால், பிரெடெட் பட்டர்ஃபிளை இறால், பீல்டு & டிவைன்டட் டெயில் ஆன் ஸ்க்வீவர் இறால், குக் செய்த PDTO இறால், மெரினேட்டட் PD டெயில்-ஆன் இறால், பிளான்ச் செய்யப்பட்ட ஸ்கூவர் ரிங், பிரட்டட் ஸ்க்விட் ரிங், மற்றும் ஃபிஷ் ஃபிலேட் போன்ற எட்டு மிகவும் தேவையுள்ள மதிப்பூட்டப்பட்ட கடல் உணவுப் பொருட்களை இரண்டரை மணிநேரத்திற்குள் செய்து காட்டினார்கள்.
தரம், சுகாதாரம், செய்முறை மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் அளவுகோல்களில் தயாரிப்புகள் தீர்மானிக்கப்பட்டன.
இந்த நிகழ்வின் முன்னோடியாக, பயிற்சியின் போது பெறப்பட்ட செய்முறை திறன்களை மதிப்பிடுவதற்காக இந்தியாவின் மேற்கு கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளைச் சார்ந்த கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற நிபுணர்களுக்கு MPEDA பல சுற்று திறன் மேம்பாட்டுச் சோதனைகளை மேற்கொண்டது. திறன் மேம்பாடு ஒலிம்பியாட்டின் ஆரம்ப சுற்றுகள் மே 29 அன்று கொச்சி (மேற்கு கடற்கரை மண்டலம்) மற்றும் ஜூன் 5 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் (கிழக்கு கடற்கரை மண்டலம்) நடைபெற்றது.
மேற்கு கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளைச் சார்ந்த கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து தலா ஐந்து வெற்றியாளர்கள் அரையிறுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு, பணப்பரிசுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் பெறும் நபருக்கு ரூ.1,00,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.75,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.50,000, மேலும் நான்காம் இடத்திற்கு ஆறுதல் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.
MPEDA சேர்மன் திரு. டி.வி. சுவாமி அவர்கள் கூறுகையில், "இதன் முக்கிய நோக்கம் இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் மதிப்பூட்டல் துறையை வலுப்படுத்தவும், மதிப்பூட்டப்பட்ட கடல் உணவின் உலகளாவிய ஏற்றுமதிக்குத் தாயகமாக இந்தியாவை மாற்றுவதும்" எனத் தெரிவித்தார்.
"போட்டியின் முக்கியத்துவத்தையும் நிபுணர்களிடமிருந்து பெறும் உற்சாகமான வரவேற்பையும் கருத்தில் கொண்டு, இதனை வருடாந்திர நிகழ்வாக மாற்ற MPEDA திட்டமிட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் விக்சித் பாரத் 2047 நிகழ்வானது ஒலிம்பியாட் நிகழ்வுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்றும், தொழில்துறை சார்ந்த திறன்களை ஊக்குவிப்பதன் மூலமும், நிபுணத்துவம் பெற்ற கடல்சார் உணவு தொழிலாளர்களை அங்கீகரிப்பதன் மூலமும், கடல் உணவுத் துறையில் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதன் மூலமும் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) இலக்குகளை ஆதரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியா, 2030க்குள் மதிப்பூட்டப்பட்ட கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை மொத்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியின் 20 சதவீதமாக இரட்டிப்பாக்கும் இலக்கைக் கொண்டுள்ளது.