காப்புரிமை மீறல் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த நிறுவனமான சோலினாஸ் மீது ஜென்ரோபோடிக்ஸ் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கை

Trivandrum / April 24, 2025

திருவனந்தபுரம்ஏப்.24: கையால் மலம் அள்ளுவதை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் ரோபோட்டிக் சொலியூஷனும், சர்வதேச அளவில் பாராட்டு பெற்ற பண்டிகூட் ரோபோடிக் ஸ்கேவெஞ்சரை உருவாக்கிய நிறுவனமுமான ஜென்ரோபோடிக்ஸ், அதன் தனியுரிம தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை மீறியதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான சோலினாஸ் இன்டெக்ரிட்டி பிரைவேட் லிமிடெட் மீது சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ரோபோடிக் மேன்ஹோல் மூலம் சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை வைத்திருக்கும் ஜென்ரோபோடிக்ஸ், அதன் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக தொடர்புடைய சட்ட மன்றத்தை அணுகியது, இப்போது இந்த வழக்கானது விசாரணைக்கு எடுக்கப்பட்டு தற்போது நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது.

சட்ட மீறலை செய்திருப்பதாகக் கூறப்படும் சோலினாஸின் ஹோமோசெப் சியூவர் ரோபோட், பாண்டிகூட் ரோபோவிற்கான தற்போதைய காப்புரிமைகளால் பாதுகாக்கப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் அடிப்படைகளுடன் நெருக்கமாக ஒத்திருப்பதாக ஜென்ரோபோடிக்ஸ் குற்றம் சாட்டுகிறது.

இந்த ஒற்றுமைகள் அதன் தனியுரிம தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கப்படாத வகையில் பயன்படுத்துவதாக கடுமையான சந்தேகம் எழுப்புவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளதுடன், அதன் காரணமாக தற்போது சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆயினும்கூட, 21/04/2025 அன்று மாண்புமிகு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது முன்மொழியப்பட்டபடி, இந்த விஷயத்தில் நடுவர் மூலம் தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பரிந்துரையை ஜென்ரோபோடிக்ஸ் ஏற்றுக்கொண்டது.

ஜென்ரோபோடிக்ஸ், இந்தியாவின் வளர்ந்து வரும் ஆழ்ந்த தொழில்நுட்பச்சூழல் அமைப்பிற்குள் நெறிமுறை சார்ந்த புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் உண்மையான தொழில்நுட்ப பங்களிப்புகளைப் பாதுகாப்பதற்குமான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தி வருகிறது என்று ஒரு அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்த விஷயம் இப்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், நிறுவனம் பொதுக் கருத்துகளைத் தெரிவிப்பதை தவிர்ப்பதுடன், சட்டரீதியாயான செயல்முறையின் முடிவுக்காகக் காத்திருக்கும்" என்றும் தெரிவித்துள்ளது.

ஜென்ரோபோடிக்ஸ் பற்றிய அறிமுகம்

2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜென்ரோபோடிக்ஸ், சமூக அக்கறை சார்ந்து ஊக்குவிக்கப்படும் ரோபோ கண்டுபிடிப்புகளில் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. அதன் முதன்மை தயாரிப்பான பண்டிகூட் ரோபோ, கையால் மலம் அள்ளும் அபாயகரமான நடைமுறையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற பண்டிகூட், 23 மாநிலங்களிலும் 200க்கும் மேற்பட்ட இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு, சுகாதாரப் பணிமுறைகளை மாற்றியமைத்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் அர்த்தமுள்ள சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், ஆழ்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் ஜென்ரோபோடிக்ஸ் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

 

Photo Gallery