CSIR-NIIST-இன் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை தமிழகம் ஆதரவு கரம் நீட்டி ஏற்கிறது என்று அமைச்சர் டாக்டர் T R B ராஜா கூறுகிறார்

CSIR-NIIST வளாகத்தில் விஞ்ஞானிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்
Trivandrum / December 30, 2024

திருவனந்தபுரம், டிச. 30: தனது மாநிலத்தில் விவசாயம்தொழில்துறை மற்றும் MSME துறைகளில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக, CSIR-தேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CSIR-NIIST) தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளது என்று தமிழ்நாட்டின் தொழில்துறைமுதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரான டாக்டர் T R B ராஜா இன்று கூறினார்.

நகரின் பாப்பனம்கோடில் உள்ள NIIST வளாகத்திற்குச் சென்ற டாக்டர் ராஜாCSIR-NIIST இயக்குநர் டாக்டர். சி. ஆனந்தராமகிருஷ்ணன் மற்றும் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார்.

நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகமான CSIR-NIIST, தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகளின் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை வெற்றிகரமாக உருவாக்கி மேம்படுத்தியுள்ளது, இதனுடனான கூட்டு முயற்சிகளை தனது மாநிலமும் ஆராயும் என்று அமைச்சர் கூறினார்.

தமிழ்நாடு தனது மாநிலத் தொழில்துறை மற்றும் விவசாய சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க இந்த நிறுவனத்தின் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்த விரும்புகிறோம் என்று டாக்டர் ராஜா கூறினார்.

"விவசாயிகள் தங்கள் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பயனடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தமிழ்நாடு அரசானது விவசாயம், தொழில்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளை (MSMEs) மேம்படுத்த புதிய யோசனைகளையும் புதுமையான தீர்வுகளையும் தீவிரமாக தேடி வருகிறது. CSIR-NIIST போன்ற முதன்மை நிறுவனங்களுடனான ஒத்துழைப்பானது அனைத்துப் பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

உற்பத்தி மற்றும் இலாபத்தை மேம்படுத்துவதன் மூலம் விவசாயிகள் மற்றும் தொழில்துறையினர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் அறிவியல் மேம்பாட்டை அடைவதை உறுதி செய்வதற்கும், புதுமைகளை வளர்ப்பதற்குமான  தமிழ்நாடு அரசின் உறுதிப்பாட்டை டாக்டர் ராஜா விளக்கிக் கூறினார்.

டாக்டர் ராஜா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அதிநவீன ஆராய்ச்சி வசதிகளை பார்வையிட்டார்.

உரையாடலின் போது, டாக்டர் அனந்தராமகிருஷ்ணன், அளவிடக்கூடிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது தொடர்பாக நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துரைத்துரைத்ததுடன் மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தீர்வுகளை செயல்படுத்த தமிழக அரசுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது விருப்பம் தெரிவித்தார்.

"அமைச்சரின் வருகையானது ஒருமைப்பாடுமிக்க வளர்ச்சி மற்றும் நிலையான மேம்பாட்டை அடைவதற்கு முதன்மை ஆராய்ச்சி நிறுவனங்களுடனான கூட்டாண்மையை வளர்ப்பதில் தமிழகத்தின் முனைப்பான அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று டாக்டர் அனந்தராமகிருஷ்ணன் கூறினார்.

இந்தக் கூட்டு முயற்சியானது, தமிழக மக்களுக்கு நிச்சயமாகப் பலன்களை வழங்கும் வகையில், புதுமையின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும், என்றார் அவர்.

மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தக்கூடிய விவசாயிகளின் வருமானம், நிலைத்தன்மை முயற்சிகளை மேம்படுத்தும் வேளாண் சார்ந்த தொழில்கள் உட்பட, சாத்தியமான ஒத்துழைப்பின் பல பகுதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. தமிழ்நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துதல், ஹைட்ரஜன் மதிப்பு சங்கிலி உற்பத்தித்திறன் மற்றும் MSMEகளை ஆதரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

தவிர, CSIR-NIIST இன் கண்டுபிடிப்புகளை தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் தமிழ்நாட்டின் தொழில்துறை சுற்றுச்சூழலில் தடையின்றி ஒருங்கிணைப்பது, சுகாதாரப் பாதுகாப்பில் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை மேம்படுத்துவது குறிப்பாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

NIIST என்பது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் இடைநிலை அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (சிஎஸ்ஐஆர்) ஆகியவற்றின் ஆய்வகமாகும்.

Photo Gallery

+
Content
+
Content