இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுடன் போட்டியிடும் வகையில் இருக்கும்: போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி

Trivandrum / December 20, 2023

திருவனந்தபுரம், டிச 20: அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுடன் போட்டியிடும் வகையில்
சாலை உள்கட்டமைப்பு என்னும் லட்சிய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. பெருநகரங்களில்
கூட்ட நெரிசலை குறைப்பதோடு, பயண நேரம் மற்றும் சாலை விபத்துக்களையும் கணிசமாகக்
குறைக்கிறது என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஸ்ரீ நிதின்
கட்கரி கூறினார்.


கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாட்டின் சாலைகளை பாதுகாப்பானதாகவும் சிறப்பாகவும்
மாற்றுவதற்கான முறையில் திரு கட்கரி, தனது அமைச்சகம் ரூபாய் 50 லட்சம் கோடிக்கும்
அதிகமான திட்டங்களுக்கான பணிகளை வழங்கியதாகவும், தற்போதுள்ள கொள்கைகளை
மேம்படுத்துவதன் மூலம் ஒப்பந்தங்களை அனுமதிப்பதற்கான நடைமுறையை
எளிதாக்கியுள்ளதாகவும் அவா் கூறினார்.


"ஒப்பந்தத்தை அனுமதிக்க வேண்டி எந்த ஒப்பந்தக்காரரும் என்னிடம் வரத் தேவையில்லை.
நாங்கள் வெளிப்படையானவர்கள், காலவரையறை கொண்டவர்கள், விளைவு சார்ந்தவர்கள்
மற்றும் தரநிலைக்கு முக்கியத்துவம் மற்றும் வேகமாக முடிவெடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அமைச்சகம், ஒப்பந்ததாரர்கள், வங்கியாளர்கள் என அனைவரையும் ஒரே குடும்பமாகக்
கருதுகிறோம். நாம் நல்ல வேலையை ஊக்குவிக்கிறோம், அதனால்தான் நம்மிடம் ஏழு உலகச்
சாதனைகள் உள்ளன. இதுவே இந்த அமைச்சகத்தின் மாபெரும் சாதனை” என்று மனோரமா
இயர்புக் 2024ல் வெளிவந்த ஒரு நேர்காணலில் அவர் கூறினார். "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு,
எங்கள் சாலை உள்கட்டமைப்பு அமெரிக்காவிற்கு சமமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்."
‘ஒருபோதும் தவறான வாக்குறுதிகளை அளிக்கவில்லை’ என்று வலியுறுத்திய அமைச்சர்,
உள்கட்டமைப்பின் எதிர்கால வளர்ச்சி நாட்டின் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து மூலதன முதலீட்டை ஈர்க்க இந்தியாவுக்கு
வலுவான உள்கட்டமைப்பு தேவை, இது வறுமையை நீக்கி வேலைவாய்ப்பை உருவாக்கும்.
ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவை முதலிடமாக மாற்ற தீர்மானித்த அவர், இந்தியாவின்
ஆட்டோமொபைல் தொழிலானது சமீபத்தில் ஜப்பானை விஞ்சி சீனா மற்றும் அமெரிக்காவிற்கு
அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்றார். "ரூ.7.5 லட்சம் கோடி மதிப்புடைய
எங்கள் தொழில்துறை மற்றும் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் அதிகபட்ச GST இந்தத்
துறையிலிருந்து உருவாக்கப்படுகிறது. இதுவரை, இந்தத் துறையால் 4.5 கோடி
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது
ஆட்டோமொபைல் துறையின் அளவை 15 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்குவதே எனது கனவு.

ஒவ்வொரு துறையிலும் நாம் இப்படித்தான் முன்னேறி வருகிறோம். ஏற்கனவே வேகமாக
வளர்ந்து வரும் பொருளாதாரமாக நாங்கள் உள்ளோம்.
16 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதைபடிவ எரிபொருளின் நுகர்வைக் குறைக்க மின்சாரம்
மற்றும் மாற்றத்தக்க எரிபொருள் வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்
வலியுறுத்தினார். ஃப்ளெக்ஸ் என்ஜின்கள் கொண்ட சில வாகனங்கள் இப்போது பெட்ரோலுக்கு
பதிலாக எத்தனால் மூலம் இயக்கப்படுகின்றன. எத்தனாலின் வீதம் ரூ.60 மட்டுமே என்பதால்
இது எரிபொருளின் சராசரி விலையை ரூ.15 ஆகக் கொண்டுவரும், மேலும் இது மின்சாரத்தையும்
உருவாக்கும். "நாங்கள் இப்போது எத்தனால் எரிபொருள் நிலையங்களைத் திறக்கிறோம்,; என்று
அவர் தெரிவித்தார்.


கரும்புச்சக்கை மற்றும் வைக்கோல் போன்றவற்றில் இருந்து எத்தனால் எரிபொருளை உற்பத்தி
செய்ய முடியும் என்பதால், இந்திய விவசாயிகளுக்கு ‘உர்ஜா தாதா’ (எரிசக்தி உற்பத்தியாளர்) என
இரட்டிப்பு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கட்கரி கூறினார். ;இந்திய விவசாயத்தை
எரிசக்தி மற்றும் மின்துறையை உள்ளடக்கும் விதமாகப் பல்வகைப்படுத்துவது நம் நாட்டின்
எதிர்காலத்தை, குறிப்பாக கிராமப்புற விவசாயம் மற்றும் பழங்குடி மக்களின் எதிர்காலத்தை
மாற்றப் போகும் மிக முக்கியமான கொள்கையாகும். ஸ்மார்ட் நகரங்களைப் போலவே, ஸ்மார்ட்
கிராமங்களையும் நாம் கொண்டிருக்கலாம். இது நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.
அதனால்தான் நாங்கள் கொள்கை மாற்றத்தை கொண்டு வருகிறோம்.

;
பொதுப் போக்குவரத்தின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, இந்தியா இப்போது மின்சாரத்தில்
இயங்கும் ரோப்வேக்கள், கேபிள் கார்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தை இயக்குகிறது
என்றார். மின்சாரப் பேருந்துகளை அதிக நகரங்களில் அறிமுகப்படுத்த முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “ஐந்து ஆண்டுகளுக்குள் பொதுப் போக்குவரத்து முற்றிலும்
மாறும். இது குறைவான மாசுபடுத்தும், செலவு குறைந்த மாற்றாக இருக்கும்.” என்று அவர்
கூறினார்.


நெரிசல் மிகுந்த பெருநகரங்களுக்கு, ரூ.65,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் துவாரகா எக்ஸ்பிரஸ்வே (ரூ.9,000 கோடி), நகர்ப்புற
விரிவாக்க ஆறு வழிச்சாலை (ரூ.8,000 கோடி), கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலை (ரூ.12,000
கோடி), மற்றும் டெல்லி-மீரட் அதிவேக நெடுஞ்சாலை (ரூ .8,000 கோடி) ஆகியவை அடங்கும்.
விரைவான பயண நேரத்தை உறுதி செய்வதற்கு, அமைச்சகத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக,
மணாலிக்கும் லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கிற்கும் இடையிலான ரோஹ்தாங் கணவாயில் அடல்
சுரங்கப்பாதையின் உதாரணத்தை மேற்கோள் காட்டி கூறும்போது, இது பயண நேரத்தை மூன்று
மணி நேரத்திலிருந்து எட்டு நிமிடமாகக் குறைத்துள்ளது. இதேபோல், கத்ரா-டெல்லி அதிவேக
நெடுஞ்சாலை டெல்லி மற்றும் அமிர்தசரஸ் இடையே நான்கு மணி நேரத்திலும், டெல்லி மற்றும்
கத்ரா  இடையே ஆறு மணி நேரத்திலும், டெல்லி மற்றும் ஸ்ரீநகர் இடையே எட்டு
மணி நேரத்திலும் சென்றுவிடலாம்.

லடாக்கில், சோஜிலா கணவாயில் ஆசியாவின் மிகப்பெரிய சுரங்கப்பாதையின் பணிகள்
தொடங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.


மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புதிய எல்லைப்புறச் சாலைகள் கட்டப்பட்டு வருவதாகவும்
அவர் தெரிவித்தார். விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க வசதியாக 30 சாலைகள் உள்ளன.
ஹெலிபோர்டுகள் மற்றும் ட்ரோன் துறைமுகங்களைக் கொண்ட 670 சாலையோர வசதிகளை
உருவாக்க திட்டமிட்டுள்ளது.


இந்திய பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதில் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்
அப் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று திரு கட்கரி கூறினார்.
"தொழில்முனைவோர் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை வைத்திருப்பவர்களை நாம் ஆதரிக்க
வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.


எவ்வாறாயினும், விபத்துக்களை 50 சதவிகிதம் குறைப்பதாக அவர் அளித்த வாக்குறுதி விரும்பிய
முடிவுகளைத் தரவில்லை என்று அமைச்சர் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம்
விபத்துக்கள் மற்றும் 1.50 லட்சம் இறப்புகள் விபத்துகளல் ஏற்படுகின்றன, இதன் விளைவாக
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதம் இழப்பு ஏற்படுகிறது.


இது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சாலை இன்ஜினியரிங் மற்றும் பொது மக்களின்
விழிப்புணர்வு தொடர்பான பிரச்சினை. "மக்கள் சட்டத்தின் மீது அலட்சியப் போக்குடன்
இருப்பது கவலைக்கு உாியது” என்று அவர் கூறினார், சாலைப் பாதுகாப்பு குறித்த மக்களின்
மனநிலையை மாற்றுவது கட்டாயமாகும், அதற்காக ஊடகங்கள், சமூக மற்றும் கல்வி
நிறுவனங்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் உதவி
தேவைப்படுகிறது.

Photo Gallery