“2040-க்குள் நிலவில் காலடி எடுத்துவைக்கப் போகும் முதல் இந்திய விண்வெளி வீரர்" - இஸ்ரோ தலைவர்

நான்கு IAF விமானிகள், விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த பணிக்கு நியமிக்கப்பட்டனர்
Trivandrum / December 12, 2023

 

திருவனந்தபுரம், டிச 12: வரலாற்றுச் சாதனைப் படைத்த லூனார் மிஷனின் சந்திரயான்-3 நமக்கு அளித்த பெருமிதமிக்க வெற்றிக்குப் பிறகு, 2040 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்திய விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்படுகிறது என்று அதன் தலைவர் திரு எஸ். சோமநாத் கூறினார்.

இது குறித்து அவர் கூறும்போது, "விண்வெளி ஆராய்ச்சியில் ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டத்தைக் கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது, 2 முதல் 3 இந்திய விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினரை இந்திய கடல்பகுதியில் உள்ள முன்னரே வரையறுக்கப்பட்ட இடத்திற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு முன், மூன்று நாட்கள் வரை லோ எர்த் ஆர்பிட்டுக்கு (LEO) அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது" என்று கடந்த வாரம் வெளிவந்த மனோரமா இயர்புக் 2024 இதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த நான்கு சோதனை விமானிகள் இத்திட்டத்தின் விண்வெளி வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அவர்கள் பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் (ATF) பயிற்சி பெற்று வருகின்றனர் என்று விண்வெளித் துறையின் செயலாளரும், விண்வெளி ஆணையத்தின் தலைவருமான திரு சோமநாத் கூறியுள்ளார்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பயணத்தைத் தொடங்கிவைக்கும் திட்டமான ககன்யான், ஹ்யூமன் ரேட்டெட் (மனிதர்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் திறன்) ஏவுதல் வாகனம் (HLVM3), க்ரூ மாட்யூல் (CM) மற்றும் சேவை தொகுதி (SM) ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுப்பாதை தொகுதி மற்றும் உயிர்காக்கும் ஆதரவு அமைப்புகள் உள்ளிட்ட முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்குவதை உள்ளடக்கியது. மனிதர்கள் விண்வெளியில் கால் பதிக்கும் இந்தத் திட்டத்துக்கு முன்னதாக, ஏர் டிராப் டெஸ்ட், பேட் அபோர்ட் டெஸ்ட் மற்றும் டெஸ்ட் வெஹிகிள் விமானங்களுடன் ஒருங்கிணைந்த இரண்டு ஆளில்லா சோதனைப் பயணங்கள் (G1 & G2) போன்றவை இருக்கும்.

CM என்பது பணியாளர்களுக்கான விண்வெளியில் பூமி போன்ற சூழலைக் கொண்ட ஒரு வாழக்கூடிய இடமாகும், மேலும் இது பாதுகாப்பான மறு நுழைவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவசரநிலையின்போது பயன்படக்கூடிய குழுவினர் தப்பித்தல் அமைப்பும் (CES) இதில் அடங்கியுள்ளது.

சோதனை வாகனத்தின் (TV-D1) முதல் மேம்பாட்டு விமானம் அக்டோபர் 21, 2023 அன்று ஏவப்பட்டது, மேலும் இது விமானத்தில் உள்ள குழு தப்பித்தல் அமைப்பு மற்றும் குழு தொகுப்பு பிரிதலின் செயல்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டியது. அதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து தப்பித்த குழுவினர் வங்காள விரிகுடாவில் இருந்து இந்திய கடற்படையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். "இந்த சோதனை விமானத்தின் வெற்றியானது அடுத்தடுத்த ஆளில்லா பயணங்களுக்கும், 2025 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மனித விண்வெளிப் பயணத்திற்கும் முக்கியமானது" என்று திரு. சோம்நாத் கூறினார்.

இஸ்ரோவின் மற்றொரு முக்கியமான திட்டம் ஆதித்யா L1 ஆகும்.இது இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு பணித்திட்டமாகும். இது லக்ரேஞ்ச் பாயிண்ட் 1 இன் தனித்துவமான வான்டேஜ் புள்ளியில் இருந்துகொண்டு அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும். இது சந்திரன் மற்றும் சூரிய ஆராய்ச்சியில்  இந்தியாவின் ஆற்றலை வெளிப்படுத்தும். பல்வேறு இஸ்ரோ மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏழு அறிவியல் பேலோட்களுடன் கூடிய ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் மையப்பகுதி, சூரியனில் இருந்து வீசும் காற்று, சூரிய தீப்பிழம்புகள் மற்றும் கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புலங்களை அளவிடுவது உட்பட சூரியனுக்குள் பொதிந்துள்ள மர்மங்களைக் கண்டறிய முற்படும்.

செப்டம்பர் 2, 2023 அன்று தொடங்கப்பட்ட ஆதித்யா L1 ஐந்து ஆண்டு திட்டமாக மேற்கொள்ளப்படும். இந்த விண்கலம் பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சன்-எர்த் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1(L1) நோக்கி அதை நோக்கிய பாதையில் உள்ளது. ஜனவரி 2024இல் இது ஹாலோ சுற்றுப் பாதையில் இணைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றி குறித்து அவர் கூறுகையில், "இது ஒரு வரலாற்று சாதனை ஆகும். இது சந்திரனை அடைந்த நாளான ஆகஸ்ட் 23 (சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கியது) ‘இந்தியாவில் தேசிய விண்வெளி தினமாக’ பிரதமரால் அறிவிக்கப்பட்டது. 14 புவி நாட்களில், இது சந்திரனின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், கந்தகம், மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருப்பதைக் கண்டறிந்து நிலவு குறித்த மதிப்புமிக்க தரவை வழங்கியது.

"சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (SSLV), மறுபயன்பாட்டு ஏவுதல் வாகனத் (RLV) திட்டம், எக்ஸ்ரே வானியல் பணி எக்ஸ்போசாட் (XPOSAT- எக்ஸ்-ரே போலரிமீட்டர் (செயற்கைக்கோள்), விண்வெளி டாக்ஸி பரிசோதனை மற்றும் லாக்ஸ்-மீத்தேன் இயந்திரம் ஆகியவை இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

 

"ஒன்றாக இணைந்துச் செய்யப்படும் இந்த முன்முயற்சிகள் இந்தியாவின் விண்வெளி ஆய்வு, அறிவியல் முன்னேற்றத்தை வளர்ப்பது மற்றும் எப்போதும் விரிவடைந்து வரும் அண்ட அடிவானம் ஆகியவற்றில் ஒரு புதிய விண்வெளி சாகாப்தத்தை வரையறுக்கின்றன."

மூன்று கட்ட ஏவுதல் வாகனமான எஸ்எஸ்எல்வி 500 கிலோ செயற்கைக்கோளை 500 கி.மீ பிளானர் சுற்றுப்பாதையில் செலுத்த முடியும். அத்துடன் பல செயற்கைக்கோள்களுக்கும் இடமளிக்க முடியும் என்றும் அவர் கூறினார். இது லான்ச்-ஆன்-டிமாண்ட் சாத்தியக்கூறு, குறைந்தபட்ச லான்ச் உள்கட்டமைப்பு தேவைகள் மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சமீபத்திய காலங்களில் இரண்டு விமானங்களுடன், SSLV-இன் வளர்ச்சி விமானங்களில் இருந்து செயல்பாட்டு விமானங்களுக்கு மாறும் கட்டத்தில் உள்ளது.

2023-2024 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள, XPOSAT இந்தியாவின் முதல் அர்ப்பணிப்பு அறிவியல் பணியாகும். SPADEX (ஸ்பேஸ் டக்கிங் சோதனை) என்ற அறிவியல் பூர்வமான பேலோடுகளைப் பயன்படுத்தி தீவிர நிலைகளில் பிரகாசமான வானியல் எக்ஸ்ரே மூலங்களை இது ஆராயும்.

இது 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.இது மனித விண்வெளிப் பயணத்தில் பயன்பாடுகளின் நோக்கத்துடன், கட்டற்ற மற்றும் பறக்கும் தொழில்நுட்பங்களின் உருவக்கத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இரட்டை விண்கலப் பணியாகும். இந்த பணியானது இரண்டு குறு-செயற்கைக்கோள்களை உள்ளடக்கியது, இவற்றில் ஒன்று சேஸராகவும் மற்றொன்று இலக்காகவும் நியமிக்கப்பட்டு, இணை பயணிகளாக ஒன்றாக ஏவப்படும். "சந்திரயானின் எதிர்கால பயணங்களின் கீழ் லூனார் சேம்பிள் திரும்பும் பணிகளுக்கு வழி வகுப்பதில் டாக்கிங் பரிசோதனையின் வெற்றி குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்கால தொழில்நுட்பத்தில் கேம் சேஞ்சராக இருக்கும் ‘LOX மீத்தேன்’ (திரவ ஆக்ஸிஜன் ஆக்சிஜனேற்றம் மற்றும் மீத்தேன் எரிபொருள்) எஞ்சின்களின் வளர்ச்சிக்கு சமமான முக்கியத்துவம் உள்ளது. இது செவ்வாய் போன்ற பிற கிரகங்களில் மனிதர்கள் சுற்றுச்சூழலை ஆராய்வதை எளிதாக்கும் திறன் படைத்தது. மீத்தேன் என்பது ஒரு சாத்தியமான விண்வெளி எரிபொருளாகும்.இது விண்வெளியில் நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடைப் பயன்படுத்தி ஒருங்கிணைக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

2035 ஆம் ஆண்டளவில் "இந்திய விண்வெளி நிலையம்" (பாரதிய அண்டாரிக்ஷா நிலையம்) தொடங்குவது, மற்றும் உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் இருப்பை மேலும் உறுதிப்படுத்த வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் மற்றும் மார்ஸ் லேண்டர் ஆகியவற்றைக் கொண்ட கிரகங்களுக்கு இடையேயான ஆராய்ச்சியை மேற்கொள்வது போன்ற இலட்சிய இலக்குகளை பிரதமர் நிர்ணயித்துள்ளார் என்றும் திரு சோமநாத் கூறினார்.

"இந்தியாவின் விண்வெளித் திட்டம் வரவிருக்கும் ஆண்டுகளில் புதிய உயரங்களை எட்ட தயாராக உள்ளது... தொடங்கப்பட்ட ஒவ்வொரு பணி மற்றும் ஒவ்வொரு கண்டுபிடிப்புடனும், இஸ்ரோ உலக அரங்கில் ஒரு சக்தியாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.தேசிய பெருமையைத் தூண்டுகிறது,  அத்துடன் இந்தியாவின் தொழில்நுட்ப சாதனையை விரிவுபடுத்துகிறது" என்று திரு. சோம்நாத் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

முடிவடைகிறது

Photo Gallery