COVID-19 தொற்று காரணமாக மனித மூளை மற்றும் அல்சைமர், பார்கின்சன் நோய் போன்ற நரம்பியல் பிரச்சினைகள் தூண்டப்படலாம் என்று மருத்துவர் எச்சரிக்கிறார்

New Delhi / February 8, 2023

புதுடெல்லி, பிப். 8: பொதுவாக சுவாசப்பாதையைத் தாக்கும் ஒரு நோயாகப் பார்க்கப்பட்டு COVID-19 சிகிச்சையளிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மனித உடலில் அது பரவலாக ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் மோசமானது. நோய் மூளையைத் தாக்கும்போது நரம்பியக்கடத்தல் துரிதப்படுத்தப்பட்டு அல்லது தூண்டப்பட்டு அல்சைமர், பார்கின்சன் போன்ற நோய்கள் ஏற்படலாம் என முன்னணி மருத்துவர் எச்சரிக்கிறார்.

வர்த்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் புது தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் மூத்த பேராசிரியர் டாக்டர் யதீஷ் அகர்வால்  ‘ஆயிரம் தலைகள் கொண்ட மிருகம்’ என்று இந்த தொற்றுநோயை வர்ணிக்கிறார். COVID-19 நோய்த்தொற்று மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலுக்கு அப்பால் நீண்டு சென்று மனித மூளையைத் தாக்கக்கூடும் என்றும் கூறுகிறார்.

COVID-19 நோயாளிகளில் 36-84 சதவீதம் பேருக்கு நரம்பியல் சிக்கல்கள் ஏற்படுவதாக பெரிய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விசித்திரமாக, நோய்க்குப் பிறகு நரம்பியல் பிரச்சனை அறிகுறிகளை அனுபவிக்கும் பலர் 50 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் நோய்த்தொற்றுக்கு முன்னர் ஆரோக்கியமாக இருந்தனர் என்பதை மனோரமா இயர்புக் 2023க்கான பிரத்யேக கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.

இதய அடைப்பு, வேறுவகையான எதிர்வினை கோளாறுகள் மற்றும் மனச்சோர்வு ஆகியவை நோயில் இருந்து மீண்டு உயிர் பிழைத்தவர்களில் சிலருக்கு ஏற்படலாம். COVID-19 காரணமாக ஏற்பட்ட இந்த அழுத்தம், அதிகப்படியான மது அருந்துதல், போதைப்பொருள் பயன்பாடு, தற்கொலை எண்ணம், பிரமை மற்றும் சித்தப்பிரமை போன்ற ஆரோக்கியமற்ற நடத்தைகளையும் தூண்டலாம். COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தில் இதுபோன்ற மிதமானது முதல் கடுமையான அறிகுறிகள் பொதுவானவை.

கொரோனா வைரஸின் பல்வேறு வகைகள் மூளையின் செயல்பாடு, நடத்தை மற்றும் அறிவுசார் திறன்களை பல வழிகளில் பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இப்போது உள்ளன. "கடுமையான இந்த விளைவுகளில் சில விளைவுகள் குறுகிய காலத்தில் மறைந்துவிடும். மற்ற விளைவுகள் நீண்ட காலம் நீடித்து பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை துயரத்தின் வாயிலாக மாற்றும்" என மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் பாரா மெடிக்கல் ஹெல்த் சயின்ஸஸ், குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் டீன் டாக்டர் அகர்வால் கூறுகிறார்.

“எச்சரிக்கை ஒலிகளை மிகவும் சத்தமாக ஒலிக்காமல், COVID-19 இன் சாத்தியமான நீண்ட கால விளைவுகளைக் அறிவாற்றலுடன் கண்காணிப்பது நல்லது என்பதற்கான திட்டவட்டமான சான்றுகள் இப்போது உள்ளன. இது தனிநபரின் வாழ்க்கையில் கவனிக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களின் சிந்தனை, பகுத்தறிவு மற்றும் நினைவாற்றலை குறைக்கிறது. இந்தத் தொற்றுநோய் அவர்களின் அன்றாட செயல்பாட்டை அதன் இருண்ட கரங்களால் கட்டிப்போடுகிறது, ”என்று அவர் கூறுகிறார்.

COVID -19 தொற்றால் ஏற்படும் நரம்பியல் மற்றும் அறிவாற்றல் விளைவுகளைப் பற்றி நன்கு புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் மில்லியன் கணக்கான மக்களை இந்த நோய் பாதித்துள்ளது. பல விளைவுகள் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. "பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நரம்பியல், மனநல மற்றும் அறிவாற்றல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் பொது சுகாதார தாக்கங்கள் மிகவும் கணிசமாக இருக்கும்," என்று அவர் எச்சரிக்கிறார்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையைப் பற்றி, "பாதிக்கப்பட்ட நபர்களில் அவர்களின் திறனை மதிப்பிடுவதற்கு திறம்பட வேலை செய்தல், நிதி நிர்வாகம், அன்றாட செயல்பாடு, தகவலறிந்த முடிவுகளை எடுத்தல் போன்றவற்றில் சரியான நேரத்தில் தனிப்பட்ட மருத்துவ மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் இந்த மொத்த விளைவுகள் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் உருவாக்க எளிய மருத்துவ மற்றும் பொது சுகாதார உத்திகளை உருவாக்குவதும் கட்டாயம் எனவும் டாக்டர் அகர்வால் கூறுகிறார்.

"தனிநபர்கள் தங்கள் குறைபாடுகளை சமாளித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவுவதே நமது குறிக்கோள்" என்று அவர் கூறுவதுடன் உதவி தேவைப்படும் கோவிட் நோயில் இருந்து மீண்டு உயிர் பிழைத்தவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தேவையைப் பொறுத்து மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில், ஒரு மறுவாழ்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார். குடும்ப மருத்துவர், நரம்பியல் மருத்துவர், பிசியோதெரபிஸ்ட், மனநல மருத்துவர் மற்றும் உளவியலாளர் ஆகியோர் அடங்கிய குழு இழப்பீட்டுச் செயல்பாட்டில் உதவ முடியும் என்கிறார்.

உலகெங்கிலும் நோயால் ஏற்படும் பெரிய நோயுற்ற தன்மை மற்றும் இறப்புகளை "தாண்டவ (அழிவு நடனம்) விளைவு" என்று விவரிக்கும் அவர், COVID-19 தொற்றால் பல நரம்பியல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் காயங்கள் மிக முக்கியமானவை. "உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை இந்த வைரஸ் தூண்டுகிறது, ஆனால் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுவதற்குப் பதிலாக, உடலின் சொந்த செல்களையே அதன் எதிரியாகக் குறிவைத்து அழிக்கும்போது நோயெதிர்ப்பு மண்டலம் முட்டாளாக்கப்படுகிறது. இவ்வாறு சிதைந்த செல்கள் மூளை செல்கள் மற்றும் பிற உறுப்பு மண்டலங்களைத் தாக்குகின்றன. இது சில சமயங்களில் என்செபாலிடிஸ் எனப்படும் தீவிர மூளை அழற்சியை உருவாக்குகிறது" என மேலும் கூறுகிறார்.

இந்த வைரஸ் இரத்த-மூளை பாதுகாப்பு அமைப்பை தாக்குவதன் மூலம் மூளையில் நேரடியாக காயம் ஏற்படுவதற்கு காரணமாகலாம். இரத்த நாளங்களில் அழுத்தத்தை அதிகரித்து மூளையில் ரத்தக்கசிவை உருவாக்கலாம். மூளை பக்கவாதம் ஏற்படவும் உடலில் இரத்த உறைதல் அமைப்பில் செயலிழப்பை ஏற்படுத்தவும் காரணமாக அமையலாம்.

கொரோனா வைரஸ் தொற்று நரம்பியல் பிரச்சனைக்கான பல்வேறு அறிகுறிகளை உருவாக்கலாம். மூன்றில் இரண்டு பங்கு COVID-19 நோயாளிகள் வாசனை இழப்பு மற்றும் சுவை இழப்பு பற்றி புகார் கூறுகின்றனர். இவை பெரும்பாலும் நோயின் முதல் அறிகுறிகளாகும், மேலும் அவை நீண்ட காலம் நீடிக்கும். தொற்றுநோய் பரவலின்  தற்போதைய நிலைமையில், இந்த அறிகுறிகள் நோயை விரைவாக அடையாளம் காண உதவுகின்றன. ஆனால் சில நோயாளிகள் மூளை வீக்கம், வீக்கம், பக்கவாதம் மற்றும் மூளை ரத்தக்கசிவு ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இந்த நோயாளிகள் தான் அதிக ஆபத்தில் உள்ளனர் மற்றும் அவர்கள் குணமடைய நீண்ட தீவிர மருத்துவமனை கவனிப்பு தேவைப்படலாம்.

"இது குறித்து ஆரம்பத்திலேயே பேசப்படுகிறது என்றாலும்கூட, COVID -19 தொற்று காரணமாக ஏற்பட்ட கடுமையான நரம்பியல் அழற்சி மற்றும் நரம்பியல் காயத்தின் சாத்தியமான நீண்டகால தாக்கங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தற்போதைய நிலை சற்று மூடிமறைக்கப்பட்டு இருந்தாலும் இது குறித்து அறிந்துகொள்வதற்கான சில அறிகுறிகள் தலைக் காட்ட்த் தொடங்கியுள்ளன”, என்கிறார் மருத்துவர்.

Photo Gallery